இலங்கை
கலைப்பிரிவில் மாற்றுத் திறனாளியான மாணவி யாழில் முதலிடம்!
2021 கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று(28) வெளியான நிலையில், கலைப்பிரிவில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி உஷா கேசவன் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
இவர் அகில இலங்கை 22 ஆம் நிலையைப் பெற்றுள்ளார். ஊடகக்கற்கை, வரலாறு, தமிழ் ஆகிய மூன்று பாடநெறிகளுக்கும் குறித்த மாணவி 3ஏ சித்திகளைப் பெற்றார்.
மாற்றுத் திறனாளியான குறித்த மாணவி உயர்தர கல்வியின் போது சுன்னாகம் வாழ்வகத்தில் தங்கி இருந்தே தனது கல்வியை மேற்கொண்டார்.
யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியைச் சேர்ந்த இந்த மாணவி தனது ஆரம்பக் கல்வியை கொட்டடி நமசிவாயம் பாடசாலையிலும் உயர்கல்வியை வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையிலும் பயின்றார்.
இவரது தந்தை இறுதி யுத்தத்தில் உயிரிழந்தநிலையில் வறுமையின் மத்தியில் தயார் பவானியின் அரவணைப்பிலேயே வாழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login