அரசியல்

அமைதி காக்கும் ரஞ்சன்!

Published

on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் அடக்குமுறைகள் மற்றும் கைதுகள் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு, ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலையான ரஞ்சன் ராமநாயக்க பதிலளிக்க மறுதளித்துள்ளார்.

சிறையில் இருந்து விடுதலையானதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பில் அடக்குமுறை குறித்த கேள்விக்கு சிறிது மௌனம் காத்த ரஞ்சன் ராமநாயக்க கருத்துகள் எதனையும் வெளியிட விரும்பவில்லை மழுப்பலான பதிலை வழங்கினார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலையான ரஞ்சன் ராமநாயக்க நடத்திய ஊடக சந்திப்பில் அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளமை ஆகிய விடயங்கள் குறித்து உங்கள் கருத்து என்னவென ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

சில நொடிகள் மௌனம் காத்த ரஞ்சன் ராமநாயக்க, உங்கள் கேள்வியை செவி மடுக்கையில் சரியான பதில் ஞாபகத்திற்கு வருகின்ற அதேவேளை, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையும் ஞாபகத்திற்கு வருவதாக தெரிவித்தார்.

எனினும் மழுப்பலான பதில் ஒன்றை தான் வெளியிட நினைப்பதாகவும் குறிப்பிட்டார்.

எனினும் ஐஸ்கிறீம் விற்பனையாளரைப் போன்று ஒரு மழுப்பலான பாதகமில்லாத பொய்யான பதிலை வழங்கும் எண்ணமொன்று ஏற்படுவதாகவும், அது தான் இரண்டாவதாக தெரிவிக்க நினைத்த பதிலைவிட பொய்யான ஒன்றாக அமையும் எனவும், எனவே இந்த கேள்விக்கு பதிலளிக்க விரும்பவில்லை எனவும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கும் ஆவணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (26) கையெழுத்திட்டார்.

எதிர்காலத்தில் நீதித்துறையை விமர்சிக்கும் வகையில் எந்தவொரு கருத்தை தெரிவிக்கவோ செயற்படவோ கூடாது என்ற நிபந்தனையுடன் பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version