அரசியல்

தொலைபேசிகளை வழங்கும் வரை போராட்டக்காரர்களுக்கு தடுப்பு!

Published

on

பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக்க மற்றும் சமூக ஆர்வலர் டான் பிரியசாத் ஆகியோரின் கையடக்கத் தொலைபேசிகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தமது அலைபேசிகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஒப்படைக்கும் வரை இவர்களை தடுத்து வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி அலரிமாளிகை மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கமவில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சந்தேக நபர்களை எச்சரித்த நீதவான், நீதிமன்ற உத்தரவை மீறினால் பிணை ரத்து செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version