இலங்கை

நல்லூரானை அலங்கரிக்கும் மணல் சிற்பங்கள்

Published

on

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மஹோற்சவம் நடைபெற்று வருகின்றநிலையில் ஆலய முன்றலில் ஒவ்வொரு நாளும் உருவாக்கப்பட்டு வரும் மணல் சிற்பங்கள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

யாழ்ப்பாணம் வேலணையைச் சேர்ந்த சுப்பிரமணியம் சுகுமார் என்பவரால் உருவாக்கப்பட்டு வருகின்ற இந்த மணல் சிற்பங்கள் பக்தர்களை பெரிதும் கவரும் வகையில் உள்ளது.

உள்நாட்டு பக்தர்கள் மட்டுமன்றி வெளிநாட்டவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் இந்த மணல் சிற்பங்களை பார்வையிட்டு வருகின்றனர்.

அரச உத்தியோகத்தரான இவர், தனது சந்தோஷத்திற்காகவும் பார்க்கின்ற ஏனையவர்களின் சந்தோஷத்திற்காகவும் இந்த மணல் சிற்பங்களை வடிவமைப்பு செய்து வருவதாக தெரிவிக்கின்றார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற நல்லூர் மஹோற்சவங்களின் போதும் இவர் மணல் சிற்பங்களை வடிவமைத்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version