அரசியல்

பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும்! – சுமந்திரன் வலியுறுத்து

Published

on

” பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்திவரும் நிலையில், அதனை இந்த அரசு மீள கையில் எடுத்துள்ளது. எனவே, பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும்.”

இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன்.

யாழில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

அத்துடன், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உட்பட பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூவரும் உடன் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் அழுத்தம் பிரயோகித்தார்.

” பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படமாட்டாது என அரசு உறுதியளித்துள்ள நிலையில், காலாவதியான அந்த சட்டம் மீள கையில் எடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் மோசமான நிலையாகும். வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

போராட்டங்களில் ஈடுபடும் உரிமை அரசமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நிலைமை இவ்வாறிருக்கையில் போராட்டக்காரர்கள்மீது எவ்வாறு பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்த முடியும்? எனவே, கைதானவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டமும் நீக்கப்பட வேண்டும்.” – எனவும் சுமந்திரன் வலியுறுத்தினார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version