இலங்கை

யாழ் மாவட்ட பாரவூர்திகளுக்கு டீசல் விநியோகிக்க நடவடிக்கை!

Published

on

யாழ் மாவட்டத்துக்கான அத்தியாவசிய பொருட்களை எடுத்துவரும் பாரவூர்திகளுக்கு தேவையான எரிபொருட்களை யாழ்ப்பாணம் MPCS நிலையத்தின் ஊடாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அத்தியாவசிய சேவைகளுக்கான மீளாய்வு கூட்டத்தில் யாழ் வணிகர் கழகத்தினர் இவ்விடயம் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அத்தியாவசிய பொருட்களை எடுத்துவரும் நடவடிக்கைக்காக குறைந்தபட்சம் 20 பாரவூர்திகள் வாராந்தம் செயற்பட வேண்டியுள்ளதாக யாழ். வணிகர் கழகத்தினர் தெரிவித்துள்ள நிலையில், அந்த வாகனங்களுக்காக வாராந்தம் 18,000 லிட்டர் டீசல் வழங்க, வர்த்தக அமைச்சு பரிந்துரைந்துள்ளது.
இதனையடுத்து அவற்றை யாழ்ப்பாணம் MPCS நிலையத்தின் ஊடாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 28.08.2022 க்கு பின்னதாக பாரவூர்திகள், கடலுணவு வாகனங்கள் உள்ளிட்டவற்றுக்கு நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகங்கள் ஊடாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு மேலதிக QR Code வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version