இந்தியா

இலங்கைக்குள் நுழையும் இந்திய உளவு விமானம்

Published

on

இந்தியா, டோர்னியர் (Dornier) உளவு விமானம் ஒன்றை இலங்கைக்கு வழங்கவுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

நாளைய தினம் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரவிருந்த சீன உளவு கப்பலான யுவாங் வாங் 5க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்த டோர்னியர் உளவு விமானத்தை இலங்கைக்கு இந்தியா வழங்கவுள்ளது.

பெரும்பாலும் இந்த விமானம் இந்த மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட டோர்னியர்-228 உளவு விமானம், இந்தியக் கடற்படையால் மின்னணுப் போர்ப் பணிகள், கடல்சார் கண்காணிப்பு, பேரிடர் நிவாரணம் மற்றும் பிற பணிகளுக்குப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் இந்த உளவு விமானத்தை, இலங்கை கடல் கண்காணிப்பு மற்றும் பிற நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version