அரசியல்

இலங்கை நிலவரத்தை உன்னிப்பாக அவதானிக்கின்றோம்!

Published

on

இலங்கையில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளமை உட்பட வேகமாக மாற்றமடைந்து வரும் நிலவரத்தை உன்னிப்பாக அவதானிப்பதாக பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய இணை அமைச்சர் அமன்டா மில்லிங் (Amanda Milling) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

இலங்கை எதிர்கொண்டுள்ள தற்போதையஅரசியல் பொருளாதார சவால்களிற்கு அனைத்து தரப்பினரையும் ஜனநாயக ரீதியில் அமைதியான அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய தீர்வை காணவேண்டும். அத்துடன் அத்துடன் அனைத்து தரப்பினரும் சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும். வன்முறைகளை பின்பற்றவேண்டாம்.

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணயநிதியம் போன்ற பன்னாட்டு அமைப்புகளின் மூலம் பிரிட்டன் உதவிகளை வழங்குகின்றது சர்வதேச நாணயநிதியத்தில் பிரிட்டன் ஐந்தாவது பெரிய பங்குகளை கொண்டுள்ளது. இந்நிலையில் ஐநாவிற்கும் உலக உணவு ஸ்தாபனத்திற்கும் அது பெரும் பங்களிப்பை வழங்குகின்றது. – என்றார்.

மேலும், சர்வதேச அரங்கில் பிரிட்டனிற்கு குறிப்பிடத்தக்க குரல் உள்ளதாக தெரிவித்த அமன்டா மில்லிங் (Amanda Milling), இலங்கையின் கடன்நெருக்கடிக்கான தீர்வுகள் குறித்து சக பாரிஸ் கழக உறுப்பினர்கள் உலக வங்கி உட்பட பன்னாட்டு அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version