இலங்கை
கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு!
பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் நெருக்கடியால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.
அத்துடன் திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு 50 கிலோகிராம் கோதுமை மா மூடையை கொண்டு செல்லும் போது ஒரு மூடைக்கு 300 ரூபா மேலதிகமாக அறவிடப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
அதேசமயம் திருகோணமலையில் இருந்து மருதானைக்கு கடந்த காலங்களில் ரயிலில் கோதுமை மா கொண்டு செல்லப்பட்டதாகவும், தற்போது ரயிலில் கோதுமை மா கொண்டு செல்வது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
You must be logged in to post a comment Login