அரசியல்

அவசரகால சட்டத்துக்கு ஆதரவு சரியான முடிவே!

Published

on

” அவசரகால சட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எடுத்த முடிவு சரியாகும்.” – என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” அவசரகால சட்டத்தை ஆதரிப்பதானது, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கொள்கைக்கு முரணான செயல்.” என அக்கட்சியின் தவிசாளர் ஜி.எல். பீரிஸ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் வினவியபோதே கட்சியின் பொதுச்செயலாளர் இவ்வாறு பதிலடி கொடுத்தார்.

” கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச போன்றோரை பதவி விலகுமாறு கடிதம் எழுதிய தரப்புகளுடன்தான் தற்போது பீரிஸ் இருக்கின்றார். அது கட்சி கொள்கைக்கு ஏற்ற செயலா?” – எனவும் அவர் கேள்வி எழுப்பினார் .

தவறான திசையில் பயணித்தவர்கள் தவறை, உணர்ந்து மீண்டும் கட்சிக்கு வருவார்கள் என நம்பிக்கையும் வெளியிட்டார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version