இலங்கை

யாழில் எரிபொருள் அட்டை நடைமுறையில் மாற்றமில்லை!!

Published

on

எரிபொருளுக்கு தேசிய ரீதியிலான “பாஸ்” வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் யாழ்.மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் அட்டை நடைமுறை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேசன் தெரிவித்தார் .

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

எரிபொருள் விநியோக ஒழுங்கு முறை தொடர்பில் தேசிய ரீதியிலான வேலைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட முன்னரே எரிபொருள் அட்டை விநியோகத்தை நாம் ஆரம்பித்துவிட்டோம் .

இப்போது தேசிய ரீதியான வேலைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . அதனை நாம் புறக்கணிக்க முடியாது. ஆனாலும், யாழ். மாவட்டத்தில் எரிபொருள் அட்டை தொடர்ந்தும் வழங்கப்பட்டு, அதன் ஊடாக விநியோக ஒழுங்கு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version