இலங்கை
வீதி அபிவிருத்திக்கு மட்டும் 44 கோடி!!
கடந்த இரண்டு வருடங்களில் வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக மாத்திரம் செலவிடப்பட்ட தொகை 44 ஆயிரத்து 300 கோடி ரூபா என நிதியமைச்சு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.
2021ஆம் ஆண்டு அதற்கான செலவு இருபத்தொராயிரத்து முந்நூறு கோடி ரூபாவாகவும், 2020ஆம் ஆண்டில் இருபத்து மூவாயிரம் கோடி ரூபாவாகவும் செலவாகியுள்ளது.
கடந்த ஆண்டு, ஒருங்கிணைந்த வீதி மேம்பாட்டுத் திட்டத்துக்காக நான்காயிரத்து எண்ணூற்று நாற்பது கோடி ரூபாவும், பிரதான வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளை அணுகுவதற்கும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாற்று வீதி அமைப்பதற்கும் நான்காயிரத்து எண்ணூற்று இருபத்தி ஆறு கோடி ரூபா செலவிடப்பட்டது.
மேலும், மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்காக முந்நூற்று ஐம்பத்தைந்து கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்காக செலவிடப்பட்ட தொகை ஆயிரத்து முந்நூற்று முப்பத்திரண்டு கோடி ரூபாவாகும்.
கொழும்பின் வெளிவட்ட வீதிக்கு நூற்றியாறு கோடி ரூபாவும், கோபுரங்கள் மீது உத்தேச துறைமுக நுழைவு வீதிக்கு நானூற்றி ஐம்பத்தைந்து கோடி ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login