இலங்கை

பொன்னாலையில் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு!

Published

on

யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்துள்ளது.

பொன்னாலை சுழிபுரம் பகுதியை சேர்ந்த யசோதரன் யஸ்மிகா (வயது 1 வருடம் 10 மாதம்) எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது..

குறித்த குழந்தை வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டு இருந்த வேளை , அருகில் இருந்த 20 லீட்டர் கொள்வனவு உடைய தண்ணீர் வாளிக்குள் இருந்த கரண்டி ஒன்றினை எடுக்க முற்பட்ட வேளை , வாளிக்குள் தலை கீழாக விழுந்து நீரில் மூழ்கியுள்ளது.

அதை அவதானித்த வீட்டார் குழந்தையை மீட்டு மூளாய் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் வைத்திய சாலையில் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version