இலங்கை

ஜப்பான் தூதுவர் – டக்ளஸ் சந்திப்பு!

Published

on

வடக்கிற்கான 3 நாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கிடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

சமகால அரசியல் நிலைவரங்கள், கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள், குறிப்பாக கடலட்டை உற்பத்தி உட்பட நீர்வேளாண்மை எனப்படும் பண்ணை முறையில் ஏற்றுமதித் தரத்திலான கடலுணவுகளை உற்பத்தி செய்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக ஜப்பானிய துாதுவருக்கு தெளிவுபடுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜப்பானின் உயரிய தொழில்நுட்ப அனுபவங்களும் – உதவிகளும் கிடைக்குமாயின், எமது மக்களுக்கு பயனுள்ள வகையில் அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version