இலங்கை

அச்சுவேலியில் எரிபொருளுக்கு டோக்கன்!

Published

on

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பல நோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இலங்கை விமான படையினால் இன்று பொதுமக்களுக்கான டோக்கன் வழங்கப்பட்டது.

பொதுமக்கள் பெட்ரோலினை பெற்றுக் கொள்வதற்காக டோக்கன் வழங்கப்பட்டது இதனால் மக்கள் மதிய வேளையில் நீண்ட வரிசையில் காத்திருந்து டோக்கனை பெற்றுக்கொண்டனர்.

இருப்பினும் டோக்கனை வழங்குகின்ற விமானப்படையினர் மோட்டார் சைக்கிளில் காப்புறுதி பத்திரம்,வரி பத்திரம் மோட்டார் சைக்கிளின் இலக்கம் உள்ளிட்ட பல்வேறு தரவுகளை பதிவு செய்வதன் காரணமாக ஒவ்வொருவரை பதிவு செய்யவும் நீண்ட நேரம் தேவைப்பட்டது இதனால் மக்களுக்கும் விமான படையிருக்கும் இடையில் முறுகல் நிலை காணப்பட்டது.

அத்துடன் குறித்த டோக்கன் வழங்கும் நடைமுறையை அறிந்தவர்கள் நீண்ட தூரம் வரிசையில் நின்று பெற்றுக்கொள்வதனை அவதானிக்க முடிந்தது.

மேலும் பெட்ரோலை பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் கிராம சேவையாளர் ஊடாக பதவினை மேற்கொள்ள வேண்டும் என்கிற ஒரு நிபந்தனையையும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போலீசார் தரையிடுகின்ற நிலையும், இதற்கு மேலதிகமாக இராணுவத்தினர் பதிவுகளை மேற்கொண்டு டோக்கனை வழங்குகின்ற முறையும் காணப்படுகிறது.

இவற்றை விட இன்றையதினம் அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பலாலி விமான படையினர் எரிபொருள் வழங்குவதற்கான டோக்கனை மக்களுக்கு வழங்கி வருகின்றனர் இதனால் மக்களிடையே அசோகரிகளும் குழப்பங்களும் தோன்றியுள்ளன.

பிரதேச செயலகங்கள் ஊடாக கிராமசேவகர் மூலம் பதிவுகளை மேற்கொள்வது இலகுவான விடயம் எனவும் இவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதிவுகளை மேற்கொள்வதால் தாம் அலக்களிக்கப்படுவதாகவும் மக்கள் அதிகாரிகளை குற்றம் சுமத்தினர்.

அத்துடன் இவ்வாறு பதிவுகளை மேற்கொள்கின்ற பொழுது நீண்ட நேர தாமதமும் தமது நேரம் வீணாக்கப்படுவதாகவும் எரிபொருள் இல்லாமலே டோக்கனை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் முண்டியடிக்கும் நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிப்புக்குள்ளான மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, குறித்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் அக்கறையுடன் செயற்பட்டு மக்களுக்கு கிடைக்க வேண்டிய எரிபொருளை சரியான நடைமுறையில் வழங்க வேண்டும் எனவும் டோக்கன் பெற வந்த மக்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version