இந்தியா

வடபகுதியை இந்திய அரசிற்கு விற்க முயற்சி! – மன்னார் மாவட்ட மீனவ சங்கத் தலைவர் குற்றச்சாட்டு

Published

on

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் வட பகுதியை இந்திய அரசு அபிவிருத்தி செய்வதாககூறி வடபகுதியை இந்திய அரசிற்கு விற்கப் போகிறார்கள் என மன்னார் மாவட்ட மீனவ சங்க தலைவர்
மொகமட் ஆலம் தெரிவித்துள்ளார்,

இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்

இன்று நாட்டில் காணப்படுகின்ற அரசியல் நிலை இதற்கு அப்பால் எரிபொருள் தட்டுப்பாடு மீனவர்களுக்ககு கிடைக்காமை தொடர்பான பிரச்சனை.

இதேபோல் மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட அமைக்கப்படவுள்ள காற்றாலை மின்சாரம் மற்றும் அதற்கு அப்பால் அதானி குரூப் எடுத்துள்ள காற்றாலை மின்சாரத் திட்டம் மற்றும் ஏனைய விடயங்கள் அத்தோடு கனியவள மண் அகழ்வு அதனோடு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சமகாலத்தில் சட்டவிரோதமாக செய்யப்படுகின்ற மீன்பிடி முறைகள் வடக்கில் உள்ள மீனவ அமைப்புகளை புதுப்பித்தல் போன்ற பல விடயங்களை நாங்கள் பேசியிருக்கிறோம்.

கடந்த வியாழக்கிழமை ஒரு இந்தியன் குழு ஒன்று மன்னார் மாவட்டத்தில்அதானி குரூப் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து சென்றிருக்கின்றது.

தற்போது இலங்கைக்கு இந்தியாவின் எரிபொருள் விநியோகம் வழங்கப்படாது ஆனால் இந்தியா தற்போதைய நிலையில் எமக்கு உரிய உதவிகளை வழங்கத் தயாரில்லை. ஆனால் வடபகுதியில் வளங்களை பாவிப்போம் என்பது அவர்களுடைய குறிக்கோளாகக் காணப்படுகிறது.

ஆனால் தற்பொழுது இலங்கையில் உள்ள வளங்களை சரியாக பயன்படுத்த இலங்கை அரசுக்கு தெரியவில்லை காலத்துக்கு ஏற்றவாறு எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு எடுக்கப்படாமையினால் நாடு வறுமைக் கோட்டுக்குள் தள்ளப்பட்டடிருக்கிறது.

இந்த அரசாங்கம் நாட்டினை கூறு போட்டு ஒவ்வொரு பகுதியாக விற்றிருக்கின்றது அதானி என்பவர் இந்தியாவில் பாரியபணம் படைத்த ஒரு பெரிய தொழிலதிபர் அங்கே அவருக்கு நிறைய பிரச்சனைகள்.

அதாவது அவரால் முன்னெடுக்கப்பட இருக்கின்ற துறைமுக நகரங்கள் கூட ஒரு பிரச்சனையான காணப்படுகிறது அவரைக் கொண்டுவந்து வடபகுதியை விற்க போகின்றார்கள் நிச்சயமாக தற்போதுள்ள சூழ்நிலையில் வடபகுதியினை அபிவிருத்தி செய்வதாக கூறி திட்டங்களை நடைமுறைப்படுத்தி இந்தியாவுக்கு வடபகுதியினை விற்க போகின்றார்கள் – என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version