அரசியல்
80 ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும் தன்னெழுச்சி போராட்டம் இன்று 80ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
காலி முகத்திடல் வளாகத்தில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக நடைபெறும் இப்போராட்டத்தில் நேற்றைய தினமும் பலர் பங்கேற்றிருந்தனர்.
கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி ஆரம்பமான இப்போராட்டம், இலக்கை அடையும்வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login