இலங்கை

எரிபொருள் நெருக்கடி – ரஷ்யாவிடம் சரணடைகிறது இலங்கை

Published

on

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கான இராஜதந்திர நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றன – என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” இராஜதந்திர நடவடிக்கையின் நிமித்தம் இரு அமைச்சர்கள் நாளை (27) ரஷ்யா செல்கின்றனர். இதன்போது எரிபொருள் விவகாரம் தொடர்பிலும் கலந்துரையாடப்படும். சாதகமான பதில் கிடைக்கும் என நம்புகின்றோம். ” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேவேளை, நாட்டில் நாளை முதல் டோக்கன் அடிப்படையிலேயே எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும், படையினர் இதற்கான பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் அமைச்சர் காஞ்சன தெரிவித்தார்.

எனவே, வரிசைகளில் காத்திருப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version