இலங்கை

ஆசிரியர் பிரச்சினைனைகளுக்கு விரைந்து தீர்வு காணுங்கள்! – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை

Published

on

ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு சமூகத்தின் விளக்குகள். தயவுசெய்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் அரசாங்க அதிபர்களும் கல்வி அமைச்சும் கல்வித் திணைக்களமும் இதற்கு விரைந்து தீர்வுகாண வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தற்போது நாட்டில் உள்ள சூழ்நிலை எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் ஆசிரியர்களின் கடமையும் அவர்கள் ஆற்றும் பணியும் வித்தியாசமானது.

இந்த நிலையில் எரிபொருளுக்காக ஆசியர்களைக் காக்க வைப்பதும் அவர்களோடு அநாகரிகமாக நடந்து கொள்வதனையும் ஏற்க முடியாது.

சமூகத்தில் உள்ள குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் கல்வியூட்டி அவர்களைப் பெரியவர்களாக்கும் ஆசிரியர்களை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அவமானப்படுத்துவமும் புறக்கணிப்பதும் அநாகரிகமானது.

ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு சமூகத்தின் விளக்குகள். தயவு செய்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் அரசாங்க அதிபர்களும் கல்வி அமைச்சும் கல்வித் திணைக்களமும் இதற்கு விரைந்து தீர்வுகாண வேண்டும்.

கைகூப்பி வணங்கவேண்டிய ஆசிரியர்களை கைகாட்டி மெருட்டும் அளவிற்கு வைக்காதீர்கள். அது ஒட்டு மொத்த சமூகத்திற்கும் கேடாகும். இத்தகைய நிலை தொடருமாக இருந்தால் ஆசிரிய பணியில் இருந்து ஒதுங்கவேண்டிய நிலை ஏற்படும்.

இன்று கிளிநொச்சியில் ஒரு ஆசிரியை விட்ட கண்ணீர் ஒட்டுமொத்த ஆசிரியர்களும் விட்ட கண்ணீருக்குச் சமமானது என உள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version