அரசியல்

ஜனாதிபதி உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு!

Published

on

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூறவேண்டியவர்கள் என பட்டியலிட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உப்பட 13 பேருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் இலங்கை நிறுவனம்’ மற்றும் மேலும் மூவர் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச,முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், முன்னாள் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிக்கல, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட 13 பேர் இந்த மனுவில் எதிர் மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இலங்கையில் நெருக்கடி ஏற்படும் வகையில் பகிரங்க தன்மை இன்றியும் பொறுப்புக்கூறலை தவிர்த்து உயர்மட்ட முடிவுகளை எடுத்ததற்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு காரணமான சில விடயங்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(1) 2019 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக வரிச்சலுகை வழங்கியதன் மூலம் அரசு வருமானத்தை குறைத்தது.

(2) அந்த வரிச் சலுகையை மீண்டும் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காதது.

3) சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு பெறுவதை தாமதப்படுத்தியது.

(4) ரூபாவின் மதிப்பு தொடர்பாக உரிய நேரத்தில் தீர்மானம் எடுக்காதது.

மேற்படி விடயங்கள் குறித்து சம்மந்தப்பட்ட எதிர் மனுதாரர்கள் நேரடியாக பொறுப்புக்கூற வேண்டும் என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version