அரசியல்

தமிழருக்கு எதிரான அடக்குமுறை தொடர்கின்றது! – கஜேந்திரன் சுட்டிக்காட்டு

Published

on

இலங்கை அழிவைச் சந்தித்தாலும் பட்டினியால் மக்கள் இறக்கும் நிலை வந்தாலும் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தப் போவதில்லை எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் சபையில் இன்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“மூன்று வேளை உணவுக்குக்கூட வழியில்லாமல் நாட்டு மக்கள் தவிக்கின்றார்கள். நாடு பற்றி எரிகின்றது ஆனால், வடக்கில் சிங்கள பௌத்த மயமாக்கல் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.

குறிப்பாக முல்லைத்தீவில் கடற்படை முகாம் ஒன்றை அமைக்க கடற்படை கட்டுப்பாட்டில் உள்ள 600 ஏக்கர் காணி அளவீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு காணி உரிமையாளர்கள் எதிர்ப்பைத் தெரிவித்தபோது பாதுகாப்புப் படையினரால் அவர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இதன்போது சுயாதீன ஊடகவியலாளரான கணபதிப்பிள்ளை குமணன் கடற்படையினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்” – என்றார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன்போது கஜேந்திரன் எம்.பி. வலியுறுத்தினார்.

#SriLankaNews

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version