இலங்கை

9 பேருடன் பயணித்த ஓட்டோ கோர விபத்து! – இருவர் சாவு; ஐவர் படுகாயம்

Published

on

ஓட்டோ ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர். அத்துடன் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

தனமல்வில, சூரியாரா பகுதியில் இன்று முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஓட்டோவில் 9 பேர் பயணித்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

உடவலவயிலிருந்து தனமல்வில நோக்கிப் பயணித்த குறித்த ஓட்டோ, வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version