அரசியல்
உயர்தர பரீட்சை திகதி மாற்றம்!!
கல்வி பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை சிறிது காலத்துக்கு பிற்போடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு அறிவிப்பு விடுத்தார்.
2022 ஆகஸ்ட்டில் நடைபெறவிருந்த உயர்தரப்பரீட்சையை ஒக்டோரில் நடத்துவதற்கு தயாராகிவருகின்றோம். அதற்கு முன்னர் பரீட்சை நடைபெற சாத்தியம் இல்லை. புலமைப்பரிசில் பரீட்சையும் ஒக்டோபரில் நடைபெறும்.
இதற்கான பேச்சுகள் இடம்பெறுகின்றன, இவை இறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login