அரசியல்

யாரும் தலையிடவும் முடியாது தடுக்கவும் முடியாது ! – என்கிறார் டக்ளஸ்

Published

on

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் யார் என்பதை தற்போதைய அரசே தீர்மானிக்கும் ஆனால் நான் அமைச்சரவை அந்தஸ்துள்ள தமிழ் அமைச்சர் என்ற ரீதியில் யாழ்-கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு என்னால் முடிந்த சேவையினை செய்வேன் அதில் யாரும் தலையிட முடியாது யாரும் தடுக்கவும் முடியாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் தற்போது யாழ்மாவட்டத்தில் உள்ள பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டத்தில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் ,

தற்போது கோட்டா- ரணில் ஆட்சி இடம்பெறுகின்றது யாழ் – கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர் பதவி யாருக்கும் வழங்கப்படவில்லை.எனவே நீங்கள்தான் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு பதில் அளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை,

அதனை அரசாங்கம் தான் தீர்மானிக்க வேண்டும். யாரை நியமிக்க தீர்மானிக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு ஒரு கடமை உள்ளது. கிளிநொச்சி யாழ்ப்பாண மாவட்டங்களில் ஒரு மூத்த பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரு தமிழ் அமைச்சர் என்ற ரீதியில் எனது யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு என்னுடைய சேவை தொடரும். அதனை யாரும் தடுக்க முடியாது எனறார்.

கோத்தபாய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பதவி விலக வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகவியாளர்கள் கேட்டபோது, அவருடைய சுபாபம் அப்படி தான். ஒரு கொலை இடம்பெற்றால் கொலைகாரன் காசை கொடுத்து காப்பாற்ற சொன்னால் காப்பாற்றுபவர் தான் சுமந்திரன் என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version