அரசியல்
நட்பு நாடுகளிடம் கையேந்தும் கோட்டா!
அத்தியாவசிய மருந்துகள், உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்துவதற்கு நட்பு நாடுகளின் உதவி அவசரமாகத் தேவைப்படுகின்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தற்போதைய தேசிய நெருக்கடிக்கான தீர்வுகளை ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் அமுல்படுத்துவது மிகவும் முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற ஆசியாவின் எதிர்காலம் தொடர்பான 27ஆவது சர்வதேச மாநாட்டில் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
எதிர்கால நடவடிக்கை தொடர்பில் தேசிய இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு நாடாளுமன்றத்தில் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறையை முடக்கியுள்ள கொரோனாத் தொற்றினால் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும், இது வெளிநாட்டுப் பணியாளர்களிடமிருந்து கிடைக்கும் அந்நிய செலாவணியை குறைத்துள்ளதுடன், கடுமையான நிதி நெருக்கடி, கடன் சுமையை அதிகரித்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login