அரசியல்

ஏறாவூர் வன்முறை: O/L பரீட்சை எழுதும் மாணவனும் கைது!

Published

on

மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூரில் ஹாபீஸ் நஸீர் அஹமட் எம்.பியின் காரியாலயம், எம்.பியின் வீடு, உறவினரின் வீடு, ஹோட்டல், கடை தீவைப்பு மற்றும் ஆடைத்தொழிற்சாலையை உடைத்து சோதப்படுத்திய சம்பவங்கள் தொடர்பாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட 16 வயது சிறுவன் ஒருவர் உட்பட 15 பேரை எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுவா நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டாh.;

கடந்த 9ஆம் திகதி இரவு ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள காரியாலயம், வீடு, அவரது உறவினாரின் வீடு, ஹோட்டல், கடை என்பன தீக்கிரையாக்கியதுடன் 3 ஆடைத் தொழிற்சாலைகள் முற்றுகையிடப்பட்டு சேதமாக்கப்பட்டன.

இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்காவின் ஆலோசனைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிஸ் குமுவினர் மேற்கொண்டு வந்த விசாரணையில் நேற்று ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த நாளை திங்கட்கிழமை ஜி.சீ.ஈ. சாதரணதரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள 16 வயது சிறுவன் உட்பட 15 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதில் நேற்று கைதுசெய்யப்பட்ட சிறுவனை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது அவரை எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும், பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சை நிலையத்துக்குக் கொண்டு சென்று பரீட்சை எழுத அனுமதிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஹோட்டல் கடையில் இருந்து கொள்ளையிடப்பட்ட பொருட்களுடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 14 பேரைக் கைது செய்து ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version