அரசியல்

வன்முறைகளுக்கு காரணம் எதிர்க்கட்சியினர்! – பெரமுன குற்றச்சாட்டு

Published

on

ஜே.வி.பி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர்களின் கருத்துக்கள் குரோதமான பேச்சுக்கள் காரணமாகவே வன்முறை வெடித்தது. அலரி மாளிகைக்கு வந்து விட்டு அமைதியாக வீடுகளுக்கு சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

வன்முறையில் எம்.பிகள் உட்பட அரசியல் பிரதிநிதிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டது தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது.

கொலையுடன் தொடர்புள்ளவர்களை கைதுசெய்ய வேண்டும். இதற்கு தலைமை தாக்கியவர்களை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். 119 பேர் அரசாங்கம் சார்பில் 76 எம்.பிகள் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. சிலரின் அனைத்து சொத்துக்களும் அழிக்கப்பட்டன. ஏப்ரல் மாதத்தில் எமது எம்.பிகளின் வீடுகள் தாக்கப்பட்டன. மே 9 ஆம் திகதி அலரி மாளிகையில் நடந்த கூட்டத்தின் காரணமாக எமது வீடுகள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது.

திட்டமிட்ட வகையில் எமது வீடுகளை சுற்றிவளைக்க எதிரணி வழிகாட்டின.ஜே.வி.பி தலைவர்கள், ஐக்கிய மக்கள் சக்தி தலைவர்களின் கருத்துக்கள் குரோதமான பேச்சுக்கள் இதற்கு காரணமாக அமைந்தன. அரசியலமைப்பின் ஊடாக முடியாவிட்டால் வேறு வழியில் மாற்றுவதாக தெரிவித்தார்கள்.ஜனாதிபதியை துரத்த உதவாதவர்களை தாக்குமாறு கோரினார்கள்.எம்.பிகளின் உரிமைகளை பாதுகாப்பது சபாநாயகரின் பொறுப்பாகும். எமது நிலைப்பாட்டை மாற்றி ஜனாதிபதியை துரத்தும் முயற்சி வெற்றியளிக்காது. அரச வாகனங்கள் கூட தீவைக்கப்பட்டுள்ளன.

மக்களின் பணத்திலே அவற்றை திருத்த வேண்டியுள்ளது. அரசியல் ரீதியில் பரப்பப்பட்ட 88- – 89 கால கலவரம் மீண்டும் வேறு வழியில் முன்னெடுக்கப்படுகிறது. கடந்த 6-, 7 மாதங்களில் எதிரணி முன்வைத்த உரைகளை ஆராய வேண்டும்.” – என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version