அரசியல்
புதிய அமைச்சரவை இன்று நியமனம்!
புதிய அமைச்சரவை இன்று (16) நியமிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அதன்பின்னர் பொருளாதார வேலைத்திட்டம்தொடர்பில் பிரதமர் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். புதிய அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டமும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றம் நாளை (17) முற்பகல் சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது. இதன்போது பிரதி சபாநாயகர் தேர்வுக்கு வாக்கெடுப்பு இடம்பெறுவதற்கு சாத்தியமில்லை என்றே நம்பப்படுகின்றது.
பிரதி சபாநாயகராக ஐக்கிய மக்கள் சக்தியின் பெண் வேட்பாளர் ஏகமனதாக தெரிவாகக்கூடும். மொட்டு கட்சி உறுப்பினர் பின்வாங்கக்கூடும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லையென ஆரம்பத்தில் விமர்சிக்கப்பட்டாலும், தற்போது அவர் சாதாரண பெரும்பான்மையைவிடவும் அதிக ஆதரவை திரட்டியுள்ளார்.
ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்கான 21 ஆவது திருத்தச்சட்டமும் விரைவில் நாடாளுமன்றம் வரவுள்ளது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login