அரசியல்

தமிழர்களின் வீர வரலாறு பற்றி பேச அங்கஜனுக்கு தகுதி இருக்கின்றதா? – சுகிர்தன் கேள்வி

Published

on

2009 முள்ளிவாய்க்காலில் எங்களது உறவுகளின் இரத்தத்தை குடித்த காட்டேறிகளின் ஆட்சிக்கு 2010ல் இருந்து ஆதரவளித்து வரும் அங்கஜன் எமது வீர வரலாறு தொடர்பாக பேசலாமா என முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் கேள்வியெழுப்பினார்.

அவர் இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் அறிக்கையில்,

2009 ல் எங்கள் உறவுகளின் இரத்தம் காயமுன்னர், எங்கள் உறவுகள் கம்பிவேலிக்குள் இருந்த நேரத்தில் தமிழர்களை வென்ற வீரனாக சிங்கள மக்கள் மத்தியில் காணப்பட்ட மகிந்தவை ஆதரித்து, 2010 நாடாளுமன்ற தேர்தலில் மகிந்த கட்சியில் வேட்பாளராக நின்று சக வேட்பாளர்களுடன் வாக்குக்காக அடிதடியில் ஈடுபட்டு துப்பாக்கி பிரயோகம் வரை சென்ற அங்கஜன் வன்முறை தொடர்பாக எங்கள் இளைஞர்களிற்கு அறிவுரை கூற என்ன தகுதி இருக்கின்றது?

2015 இல் ஒட்டுமொத்த தமிழர்களும் கொலைகார ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வரக்கூடாது என நினைக்கையில் தனது பதவி ஆசைகளிற்காகவும் தனது வியாபாரத்தை பாதுகாக்கவும் எமது மக்களிற்கு மாறாக மகிந்தவுக்காக வாக்கு கேட்டு தமிழின துரோகியாக செயற்பட்டு மகிந்த தோல்லவியடைந்த மறுகணமே யாரை வெல்லக்கூடாது என முதல் நாள் வரை செய்பட்டாரோ அவர்களுடன் தனது பதவிக்காக கட்சி மாறி அமைச்சு பதவி பெற்ற பச்சோந்தி அங்கஜன் எங்கள் இளைஞர்களிற்கு அறிவுரை கூற தகுதி இருக்கின்றதா?

மீளவும் தமிழர்களை கொன்றொழித்த ராஜபக்‌ஷ குடும்பத்திற்காக 2019ல் கோத்தாபாயவுக்காக பிரசாரம் செய்து தமிழர் வாக்குகளை போலி வாக்குறுதிகளை கூறி பெற்றுக்கொடுக்க முயற்சி செய்த துரோகி தமிழர் வீர வரலாறு தொடர்பாக பேசலாமா?

2020 ல் வேலைவாய்ப்பு, அபிவிருத்தி என்ற கோசத்துடன் நாடாளுமன்ற தேர்தலில் பரப்புரை செய்து தேசியத்திற்காக போராடும் தமிழர்களின் வாக்குகளை உடைத்து தமிழர் பேரம் பேசும் பலத்தை சிதைத்து நாடாளுமன்றம் சென்று தனக்காக வாக்களித்த மக்களுக்கு எதுவும் செய்யாது ஏமாற்றிய அங்கஜன் எங்கள் இளைஞர்களிற்கு அறிவுரை கூற தகுதி இருக்கின்றதா?

நாடாளுமன்றத்தில் தனது பதவிகளை காப்பற்றுவதற்காக 20ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து ஜனாதிபதிக்கு காட்டுமிராண்டித்தனமாக அதிகாரத்தை வழங்கி ஒட்டுமொத்த தமிழர்களையும் ஏமாற்றிய அங்கஜன்,டக்ளஸ் போன்றவர்கள் வன்முறை தொடர்பாகவும் எங்களது வீர வரலாறு தொடர்பாக கதைக்க எந்த அருகதையும் இல்லை – என்றுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version