அரசியல்

ஜனாதிபதி செயலகம் முன் நீதி வேண்டி ஊடகவியலாளர்கள் போராட்டம்!

Published

on

சர்வதேச ஊடக சுதந்திர தினமான நேற்று (மே 03) கொழும்பில் ஊடகவியலாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்டுத் தாக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம், இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

கொழும்பு – காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்கவின் சிலைக்கு முன்னால் நேற்று மாலை ஒன்றுகூடிய இளம், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பேரணியாக ஜனாதிபதி செயலகம் வரை சென்றனர்.

அவர்கள், ஜனாதிபதி செயலகம் முன் நீதி வேண்டி, கோஷங்களை எழுப்பி, கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் மதகுருமார்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

போராட்டத்தின் இறுதியில், பொலிஸாரினால் அண்மையில் அகற்றப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்டுத் தாக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் நிழல் படங்கள் மீண்டும் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக வைக்கப்பட்டன.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version