அரசியல்

புதிய அரசியலமைப்பு குறித்து ஆராய அமைச்சரவை உப குழு!

Published

on

புதிய அரசியலமைப்பு குறித்து ஆராய அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நாலக கொடஹேவா இன்று தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு வரைபை தயாரிப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் த சில்வா தலைமையில் சட்டத்துறை நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு 09.09.2020 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இக்குழுவின் ஆரம்ப அறிக்கை 25.04.2022 அன்று ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ள விடயங்களை ஆராய்ந்து உகந்த பரிந்துரைகளை அமைச்சரவைக்கு முன்வைப்பதற்காக கீழ்க்காணும் அமைச்சர்களுடன் கூடிய உபகுழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

1. (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ்
வெளிவிவகார அமைச்சர் – (தலைவர்)

2. தினேஷ் குணவர்த்தன,
அரச பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண மற்றும் உள்ளுராட்சி அமைச்சர்

3. டக்ளஸ் தேவானந்தா,
கடற்றொழில் அமைச்சர்

4. (வைத்தியர்) ரமேஷ் பத்திரன அவர்கள்
கல்வி அமைச்சர் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர்

5. அலி சப்ரி
நிதி அமைச்சர் மற்றும் நீதி அமைச்சர்

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version