அரசியல்

லிற்றோ காஸ் விலை அதிகரிப்பை நிராகரித்தது அரசு!

Published

on

இன்று நள்ளிரவு  முதல் அமுலுக்குவரும் வகையில் லிற்றோ சமையல் (12.5 KG ) எரிவாயுவின் விலை 2 ஆயிரத்து 500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி புதிய விலையாக 5 ஆயிரத்து 175 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று லிற்றோ நிறுவனம் அறிவித்தாலும், விலை அதிகரிப்புக்கு அனுமதி இல்லை என அரசு அறிவித்துள்ளது.

லிற்றோ நிறுவனத்தின் விலை பட்டியலின் அடிப்படையில் 2020  செப்டம்பர் 25 ஆம் திகதிகளவில் (12.5 KG )  சமையல் எரிவாயுவின் அதிகபட்ச சில்லறை விலை ஆயிரத்து 493 ரூபாவாக காணப்பட்டது.

5  KG லிற்றோ சமையல் எரிவாயுவின் அதிகூடிய சில்லறை விலையாக 598 ரூபாவும், 2.3 KG எரிவாயுவின் விலை  289 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 2021 ஒக்டோபர் 10 ஆம் திகதி லிற்றோ சமையல் எரிவாயு விலை திடீரென அதிகரிக்கப்பட்டது.

12.5 KG சமையல் எரிவாயுவின் விலை  ஆயிரத்து 257 ரூபாவாலும்,  5 KG சமையல் எரிவாயுவின் விலை  503 ரூபாவாலும்,  2.3 KG சமையல் எரிவாயுவின் விலை 231 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டது.

இதன்படி புதிய விலையாக 12.5 KG – 2,7505 KG  – 1,1012.3 KG  – 520  – நிர்ணயிக்கப்பட்டது.

தற்போது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12. 5 KG சமையல் எரிவாயுவின் விலையை 2 ஆயிரத்து 750 ரூபாவால் அதிகரிப்பதற்கு லிற்றோ நிறுவனம் தீர்மானத்திருந்தது. இது தொடர்பான அறிவிப்பும் வெளியானது.

எனினும், விலை அதிகரிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கவில்லை என்று அரசு அறிவித்துள்ளது.  பழைய விலையில்தான் எரிவாயு விநியோகிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

சந்தையில் தற்போது சமையல் எரிவாயுவுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது. உலக சந்தையிலும் விலை உயர்வு என நிறுவனம் கூ கின்றது. எனவே , 2 ஆயிரத்து 500 ரூபாவால் இல்லாவிட்டாலும், விலை மறுசீரமைப்பு இடம்பெறுவது உறுதியென நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

‘லாப்’ நிறுவனத்தின் சமையல் எரிவாயு விலை ஏற்கனவே அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் புதிய அமைச்சரவை கடந்த 18 ஆம் திகதி பதவியேற்றது.

காஞ்சனா விஜேசேகர, எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

புதிய அமைச்சரவை பதவியேற்று மறுநாளே சிபேட்கோவின் எரிபொருள் விலையும் அதிகரித்தது. மறுநாள், கோதுமைமா விலை அதிகரிப்பையடுத்து பாண் உட்பட பேக்கரி உணவு பொருட்களின் விலை எகிறியது.  தற்போது எரிவாயு விலையை அதிகரிப்பு என்ற அறிவிப்பை லிற்றோ நிறுவனம் விடுத்துள்ளது.

ஆர்.சனத்

#SriLankaNews

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version