அரசியல்

காற்றோடு காற்றாகும் கூட்டமைப்புக்கு வழங்கிய ஜனாதிபதியின் வாக்குறுதிகள்!

Published

on

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கிய உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு மார்ச் 25 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

சுமார் மூன்று மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, நிபுணர்கள் குழுவினர் அறிக்கை வெளிவந்த பின்னர் அரசியல் தீர்வு பற்றி கலந்துரையாடுவதற்கும், அடுத்த சுற்று பேச்சுக்கு முன்னர் முக்கிய நான்கு விடயங்களை செயற்படுத்துவதற்கும் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

1.பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள். பயங்கரவாத தடைச்சட்டத்தின் மறுசீரமைப்பின் ஓர் அங்கமாக இவர்களின் விடுதலை இடம்பெறும்.

2. வடக்கு, கிழக்கில் இராணுவ தேவைக்காக இனியும் காணிகள் கையகப்படுத்தப்படமாட்டா. பிரதேச செயலக எல்லைகள், மாவட்ட எல்லைகள், கரையோர எல்லைகள் ஆகியவை மாற்றப்படமாட்டா.

அதேபோல விசேட சட்டத்தின்கீழ் காணிகள் சுவீகரிக்கப்படுவதும் நிறுத்தப்படும். அதாவது இனப்பரம்பலை மாற்றும் விதத்திலான செயற்பாடுகள் நிறுத்தப்படும்.

3. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஒரு லட்சம் ரூபா என்பது தற்காலிகமானது, அது முழுமையான இழப்பீடு அல்ல என அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பின்னணி மற்றும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் முறையான விசாரணை முன்னெடுக்கப்படும் என்ற உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

4. போரினால் பெரிதும் பாதிக்கபபட்ட வடக்கு, கிழக்கின் பொருளாதார மீள் எழுச்சிக்காக ஒரு விசேட அபிவிருத்தி நியதியத்தை உருவாக்குவதற்கும், அதில் புலம்பெயர் மக்களின் முதலீடுகளை மேற்கொள்வதற்கு அரசு எல்லா வித நடவடிக்கைளும் மெற்கொள்ளும்.

எனினும், மேற்படி உறுதிமொழிகள் இன்றும் நிறைவேற்றப்படவில்லை.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையும் இதற்கு காரணம் எனக் கூறப்படுகின்றது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version