இலங்கை

போர்க்களமானது ரம்புக்கனை! – குவிகிறது கண்டனக் கணைகள்!!

Published

on

” கல்வீச்சுத் தாக்குதலுக்கு பதில் துப்பாக்கிச்சூடா பொலிஸ்மா அதிபரே? ரம்புக்கனை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் மற்றும் கொலையை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.”

இவ்வாறு தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ரம்புக்கனையில் மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கலைப்பதற்கு – கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ள சம்பவத்தை அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும், சர்வதேச நாடுகளும், அமைப்புகளும் வன்மையாகக் கண்டித்துள்ளன.

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்க தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

” மக்கள் வன்முறையில் ஈடுபட்டால், சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் அவர்களை கைது செய்யலாம், அவர்கள்மீது சூடு நடத்த வேண்டியதில்லை.

இது ஜனநாயகமா? இதுதான் நாட்டின் சட்டமா? இதற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.” என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா., ஐ.நா. மனித உரிமைகள் பேரவை, சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் உட்பட மேலும் பல அமைப்புகள், அமைதியான போராட்டங்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version