அரசியல்

நிபந்தனைகளின் அடிப்படையில் பிரேரணைக்கு ஆதரவு! – கன்மன்பில தெரிவிப்பு

Published

on

” இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில், அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்கத் தயார்.” – என்று 11 கட்சிகளின் கூட்டணி அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறியவை வருமாறு,

” அரசுக்கு ஆதரவாக 117 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். எனவே, நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்தால் அது தோல்வி அடையும். அதன்மூலம் அரசு பலமடையும்.

எனவே, 113 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதை ஐக்கிய மக்கள் சக்தி உறுதிப்படுத்த வேண்டும். அடுத்ததாக சர்வக்கட்சி இடைக்கால அரசமைக்க, ஆதரவு வழங்க வேண்டும். இவ்விரு நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்டால், பிரேரணையை ஆதரிக்க நாம் தயார்.” – என்றார் கம்மன்பில

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version