இலங்கை

போராட்டங்களை பொருட்படுத்தாத ராஜபக்சக்கள்!

Published

on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசு பதவி விலக வேண்டுமென மக்கள் வலியுறுத்திவரும் நிலையில், அந்த கோரிக்கையை ஏற்காது – அரசை தொடர்ந்தும் முன்னெடுக்கும் நோக்கில் புதிய அமைச்சரவையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (18) நியமித்துள்ளார்.

✍️ அமைச்சரவையின் தலைவராக ஜனாதிபதியும், பிரதமராக மஹிந்த ராஜபக்சவும் அமைச்சரவையில் நீடிக்கின்றனர். ஏனைய மூன்று ராஜபக்சக்களும் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி புதிய அமைச்சரவையில் பஸில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு எவ்வித பொறுப்பும் கையளிக்கப்படவில்லை.

✍️ இராஜாங்க அமைச்சர்களாக செயற்பட்ட மொட்டு கட்சியின் 11 பேர் அமைச்சரவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர். அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தை ஆதரித்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஹாபீஸ் நஷீர் அஹமட்டுக்கும் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

✍️ தினேஷ் குணவர்தன, ரமேஷ் பத்திரண, பிரசன்ன ரணதுங்க , திலும் அமுனுகம ஆகியோரைதவிர, கடந்த அமைச்சரவையில் இருந்த எவரும் புதிய அமைச்சரவையில் இடம்பெறவில்லை. வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், நிதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் நீடிக்கின்றனர். நீதி அமைச்சு பதவியும் சப்ரியிடம் கையளிக்கப்படலாம்.

✍️ காமினி லொக்குகே, பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, கெஹலிய ரம்புக்வெல்ல, ரோஹித அபேகுணவர்தன, சரத் வீரசேகர, டலஸ் அழகப்பெரும, பவித்ராதேவி வன்னியாராச்சி, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ஆகிய மொட்டு கட்சியின் முக்கியஸ்தர்கள் பதவியேற்க விரும்பவில்லை. அவர்களுக்கு பதவிகள் வழங்கப்படவும் இல்லை.

✍️ 30 நாட்கள் மட்டுமே அமைச்சரவையில் நீடித்த எஸ்.பி. திஸாநாயக்கவுக்கும் எவ்வித பதவியும் வழங்கப்படவில்லை. நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த சிவி ரத்னாயக்கவும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை. நாமல் ராஜபக்ச வகித்த பதவியை ஏற்றுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஜீவன் தொண்டமான் நிராகரித்துவிட்டார்.

✍️ ஒரு அமைச்சருக்கு , இரு விடயதானங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கல்வி அமைச்சராக செயற்பட்ட ரிஷட் பத்திரனவின் மகனான, ரமேஷ் பத்திரனவுக்கு கல்வி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாக கருதப்படுகின்றது.

✍️ அமைச்சரவையில் பெண் பிரதிநிதித்துவம் இல்லை. ஆளுங்கட்சியின் 5 இற்கும் மேற்பட்ட பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

✍️ அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் 30 பேர் கொண்ட அமைச்சரவையை ஜனாதிபதி அமைக்கலாம். எனினும், சுமார் 20 பேர்வரையே அமைச்சரவைக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அமைச்சர்கள் பட்டியல் விவரம்

✍️ தினேஷ் குணவர்தன – பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி மன்ற அமைச்சர்.
✍️ டக்ளஸ் தேவனாந்தா – கடற்றொழில் அமைச்சர்.
✍️ ரமேஷ் பத்திரன – கல்வி மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர்.
✍️ பிரசன்ன ரணதுங்க – பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்.
✍️ திலும் அமுனுகம – போக்குவரத்து மற்றும் கைத்தொழில் அமைச்சர்.
✍️ கனக ஹேரத் – நெடுஞ்சாலைகள் அமைச்சர்.
✍️ விதுர விக்கிரமநாயக்க – தொழில் அமைச்சர்.
✍️ ஜனக வக்கும்புர- விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம்துறை அமைச்சர்.
✍️ ஷெஹான் சேமசிங்க – வர்த்தகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர்.
✍️ மொஹான் பிரியதர்ஷன டி சில்வா – நீர் வழங்கல் அமைச்சர்.
✍️ விமலவீர திஸாநாயக்க – வனவிலங்குகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர்.
✍️ காஞ்சனா விஜேசேகர – எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர்.
✍️ தேனுக விதானகமகே – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்
✍️ நாலக கொடஹேவா – ஊடகத்துறை அமைச்சர்.
✍️ சன்ன ஜயசுமன – சுகாதார அமைச்சர்.
✍️ 16. நஷீர் அஹமட் – சுற்றாடல் துறை அமைச்சர்
✍️ 17. பிரமித பண்டார தென்னகோன் – துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர்.

ஆர்.சனத்

 

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version