அரசியல்

போராட விரும்பும் இளையோர் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளோடு கைகோருங்கள்! – சுகாஷ் அழைப்பு

Published

on

கோத்தாபய ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம் வைத்ததன் அர்த்தம் சஜித்திலோ ரணிலிலோ அல்லது பொன்சேகாவிலோ நம்பிக்கையுள்ளது என்பதல்ல என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க. சுகாஷ் தெரிவித்தார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்,

இனப்படுகொலையாளிகளான ராஜபக்சகளைப் பதவியில் தொடர அனுமதிக்க முடியாது என்பதனாலேயே
கையொப்பம் வைக்கப்பட்டது.

அதற்காக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைத் தீர்ப்பதற்கு உடன்படாத எவரையும் ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டாது.

அரசியல் தீர்வற்ற வெறும் ஆட்சி மாற்றங்களுக்குக் கொடிபிடிக்க வேண்டிய தேவை எமக்குக் கிடையாது.அவ்வாறு கொடி பிடிப்பதனால் தமிழினத்திற்கு எதுவும் கிடைக்கப் போவதுமில்லை!

அவர்களின் போராட்டம் வறுமைக்கானது! எங்களின் போராட்டம் வாழ்க்கைக்கானது.

அரிசி, பருப்பின் விலை குறைந்தால் அவர்களின் போராட்டம் முடியும் இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும்வரை எங்களின் போராட்டம் தொடரும்.

போராட விரும்பும் தமிழ் இளைஞர், யுவதிகள் 1500 நாட்களைக் கடந்தும் தெருவில் போராடிக் கொண்டிருக்கும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளோடு கைகோருங்கள் என்றுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version