அரசியல்

அரசுக்கு எதிரான பிரேரணைகளுக்கு முழு ஆதரவு! – கூட்டமைப்பு தெரிவிப்பு

Published

on

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான குற்றப் பிரேரணை, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆகியவற்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும். கட்சி மட்டத்தில் இடம்பெறும் கலந்துரையாடிலின் பின்னர் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

காலி முகத்திடலில் இடம்பெறும் போராட்டம் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தனிச்சிங்கள சட்டம் திணிக்கப்பட்டபோது அதற்கு எதிராக இற்றைக்கு 60 ஆண்டுகளுக்கு முன்னர் எமது தலைவர்கள் இதே காலி முகத்திடலில் அறவழியில் போராடினார்கள். அன்று முதல் இன்றுவரை நாம் கொள்கை அடிப்படையில்தான் எமது இனத்தின் விடுதலைக்காக அரசியல் நடத்தி வருகின்றோம். இதனை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அரசியல்வாதிகளாக நாம் காலி முகத்திடல் வரமாட்டோம். எமது வடக்கு, கிழக்கு இளைஞர்கள் அதற்கு முழு ஆதரவையும் வழங்குவார்கள். எமது மக்களின் பிரதிநிதிகளாக வந்து, பிரச்சினைகளை சொல்வார்கள். ராஜபக்சக்கள் வேண்டாம் என்ற செய்தியை 2005 ஆம் ஆண்டே எமது மக்கள் சொல்லவிட்டார்கள்.

காலி முகத்திடலில் போராடும் இளைஞர்கள், தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற சம்பவங்களுக்கு மன்னிப்பு கோருகின்றனர். நீதி வேண்டும் என வலியுறுத்தி பதாதைகளை தாங்கியுள்ளனர். இனவாதத்தை, மதவாதத்தை அவர்கள் நிராகரிக்கின்றனர். இது சிறந்த மாற்றமாகும். ” – என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version