அரசியல்

காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் 5 அம்சக் கோரிக்கைகள் முன்வைப்பு!

Published

on

கொழும்பு – காலி முகத்திடலில் இன்று ஏழாவது நாளாக அரச எதிர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டுவரும் போராட்டக்காரர்கள் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

‍தமது ஐந்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாத பட்சத்தில் தாம் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

போராட்டக்காரர்களது கோரிக்கைகளாவன:-

♦️ உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச பதவி விலக வேண்டும்.

♦️ பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச உள்ளடங்கலாக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து ராஜபக்‌ச குடும்ப உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும்.

♦️ அரசமைப்பின் 19 ஆவது திருத்தத்தை மீண்டும் அமுலுக்குக் கொண்டு வருவதுடன் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள அத்தியாவசிய சேவைகள், ஏனைய துறைகளை மீட்டெடுத்தல் வேண்டும்.

♦️ இடைக்கால அரசை ஸ்தாபித்து ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட ராஜபக்‌ச குடும்ப உறுப்பினர்கள், ஏனைய அரசியல்வாதிகள் கொள்ளையடித்த நிதி மற்றும் சொத்துக்களைப் மீளப்பெறுவதுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

♦️ ஆறு மாதங்களுக்குள் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும்.

#SriLankaNews

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version