அரசியல்

நம்பிக்கையில்லா பிரேரணை! – எதிர்கொள்ள தயார் என்கிறார் அலிசப்ரி

Published

on

” அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முகங்கொடுக்க தயார்.” – என்று நிதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” அமைச்சர்கள் பதவி விலகி, அமைச்சு பொறுப்புகளை ஏற்குமாறு அழைப்பு விடுத்தோம். அந்த அழைப்பை எதிரணி ஏற்கவில்லை.

நாடாளுமன்றத்தில் 113 ஐ காண்பித்து ஆட்சியை பொறுப்பேற்க சொன்னோம். அதற்கு எதிரணி தயார் இல்லை.

எனவே, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை என்பது அரசியல் இலாபம் கொண்டது. அதனை எதிர்கொள்வோம்.” – என்றும் அலிசப்ரி குறிப்பிட்டார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version