இலங்கை
அதிகரிக்கப்பட்ட பட்டாசு விலைகள்!!
கடந்த இரண்டு மாதங்களில் உள்ளூர் மற்றும் இறக்குமதி மூலப்பொருட்களின் பற்றாக்குறை காரணமாக, பண்டிகைக் காலத்தில் பட்டாசு பொருட்களின் விலைகள் 60% அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பட்டாசு சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த சங்கத்தலைவர்,
மூலப்பொருட்களின் கடுமையான பற்றாக்குறையால் தொழில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பட்டாசு உற்பத்திக்கான காகிதங்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, காகிதத்தின் விலை 300% அதிகரித்துள்ளது.
நாட்டில் ஏற்கனவே இருக்கும் மூலப்பொருட்கள் 50% அதிகரிக்கப்பட்டுள்ளன.
சில டீலர்கள் மூலப்பொருட்களை இறக்குமதி செய்து 50% அதிகரிப்புடன் சந்தைக்கு வெளியிடுகின்றனர். எனவே, பட்டாசு உற்பத்தி செலவை அதிகரிக்க வேண்டும்.
மிகுந்த சிரமத்துடன் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டாலும், எதிர்பார்த்த லாப வரம்பில் அவற்றை விற்பனை செய்ய முடியுமா என்பது சந்தேகமாக உள்ளது.
பட்டாசு விலை உயர்வால் பண்டிகை காலங்களில் விற்பனை குறைய வாய்ப்புள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
#SrilankaNews
You must be logged in to post a comment Login