அரசியல்

15 ஆண்டுகளுக்கு பிறகு ராஜபக்சக்களுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டது இ.தொ.கா.!

Published

on

15 ஆண்டுகளுக்கு பிறகு ராஜபக்சக்களுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டது இ.தொ.கா.!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தான் வகித்துவந்த இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாடாளுமன்றத்தில் அரசுக்கு ஆதரவு வழங்காமல், சுயாதீனமாக செயற்படுவதற்கும் இ.தொ.கா. தீர்மானித்துள்ளது. அரசுக்கான ஆதரவும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட காங்கிரஸ், நுவரெலியா மாவட்டத்தில் இரு ஆசனங்களைப் பெற்றது. (ஜீவன் தொண்டமான், மருதபாண்டி ராமேஸ்வரன்)

சுமார் ஒன்றரை தசாப்தங்களுக்கு பிறகு ராஜபக்சக்கள் தலைமையிலான அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை, இ.தொ.கா. இன்று வாபஸ் பெற்றுள்ளது.

✍️✍️2005 – இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச போட்டியிட்டு வெற்றிபெற்றார். அந்த காலப்பகுதியில் இருந்துதான் ராஜபக்ச ஆட்சி ஆரம்பமாகியது. ஜனாதிபதி தேர்தலில் ரணிலை ஆதரித்த இ.தொ.கா. தேர்தலின் பின்னர், மஹிந்த அரசில் இணைந்தது.

✍️✍️ 2010 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கியது. பொதுத்தேர்தலிலும் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டது.

✍️✍️ 2015 இலும் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாகவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயற்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஆதரவு வழங்கியது. எனினும், மஹிந்த ராஜபக்ச தோல்வி அடைந்தார்.

ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு இ.தொ.கா. பகுதியளவான ஆதரவை வழங்கியது. முத்து சிவலிங்கம் பிரதி அமைச்சர் பதவியை வகித்தார். ராஜபக்சக்களுக்கான ஆதரவு முழுமையாக விலக்கிக்கொள்ளப்படவில்லை. மைத்திரியும், மஹிந்தவும் இரு கண்கள் என தொண்டமான் புழ்ந்து பேசியிருந்தார்.

✍️✍️ 2019 நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு இ.தொ.கா. ஆதரவு வழங்கியது. 2020 பொதுத்தேர்தலிலும் மொட்டு சின்னத்தில்தான் போட்டியிட்டது.

✍️✍️ 2022 இல் ராஜபக்ச அரசில் இருந்து வெளியேறும் முடிவை இ.தொ.கா. எடுத்துள்ளது.

#SriLankaNews

ஆர். சனத்

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version