அரசியல்

நாடாளுமன்றில் 4 சுயாதீன அணிகள் உதயம்!! – பெரும்பான்மையும் இழப்பு!!

Published

on

நாடாளுமன்றத்தில் அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை விலக்கிக்கொள்வதற்கு 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். அத்துடன், நாடாளுமன்றத்தில் 4 சுயாதீன அணிகளும் உதயமாகியுள்ளன.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, விமல் வீரன்ச, உதய கம்மன்பில ஆகியோரை உள்ளடக்கிய 10 கட்சிகளின் கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் அநுரபிரியதர்சன யாப்பா அணி ஆகியனவே சுயாதீனமாக செயற்படும் அறிவிப்பை இன்று சபையில் விடுத்தன.

✍️ 10 கட்சிகளின் அணி

1.விமல் வீரவன்ச
2.உதயகம்மன்பில
3.வாசுதேவ நாணயக்கார
4.திஸ்ஸவிதாரண
5.டிரான் அலஸ்
6.அத்துரலிய ரத்தன தேரர்
7.கெவிந்து குமாரதுங்க
8.வீரசுமன வீரசிங்க
9. அசங்க நவரத்ன
10. மொஹமட் முஸம்மில்
11. நிமல் பியதிஸ்ஸ
12. காமினி மலேகொட
13. அதாவுல்லா
14. கயாசான்
15. ஜயந்த சமரவீர.
16. உத்திக பிரேமரத்ன

✍️ சுதந்திரக்கட்சி

17.மைத்திரிபால சிறிசேன
18. நிமல் சிறிபாலடி சில்வா
19. மஹிந்த அமரவீர
20. தயாசிறி ஜயசேகர
21.துமிந்த திஸாநாயக்க
22. லசந்த அழகியவன்ன
23. ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய
24. ஜகத் புஷ்பகுமார
25. ஷான் விஜேலால்
26.சாந்த பண்டார
27.துஷ்மந்த மித்ரபால
28.சுரேன் ராகவன்
29. அங்கஜன் ராமநாதன்
30. சம்பத் தஸநாயக்க.

✍️ அநுர அணி

31. அனுசபிரியதர்சன யாப்பா
32. சுசில் பிரேமஜயந்த
33. சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே
34. ஜோன் செனவிரத்ன
35. சந்திம வீரக்கொடி
36 .நிமல் லான்சா
37. ரொஷான் ரணசிங்க
38.ஜயரத்ன ஹேரத்
39. நளின் பெர்ணான்டோ
40. பிரியங்கர ஜயரத்ன

✍️ இதொகா
41. ஜீவன் தொண்டமான்
42. மருதபாண்டி ராமேஸ்வரன்

விஜயதாச ராஜபக்ச ஏற்கனவே அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளார்.

பொதுத்தேர்தலில் மொட்டு கட்சிக்கு போனஸ் ஆசனங்கள் சகிதம் 145 ஆசனங்களே கிடைக்கப்பெற்றன. அந்தவகையில் சாதாரண பெரும்பான்மையை (113) அரசு இழந்துவிட்டது. ) டக்ளஸ், பிள்ளையானின் ஆதரவு இருந்தும்கூட சாதாரண பெரும்பான்மை இல்லை.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version