அரசியல்
அரசை வீழ்த்துவதற்கு இரு முனைத்தாக்குதல்! – கம்மன்பில சூளுரை
” இந்த அரசை வீழ்த்துவதற்கு இரு முனைத்தாக்குதல் தொடுக்கப்படும்.” – என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
ஒன்று பாதீட்டை தோற்கடிப்பதன்மூலம் அரசை கவிழ்க்கலாம், இரண்டாவது, அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டுவரலாம் என்றும் கம்மன்பில சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தற்போதைய அரசாங்கம் பெரும்பான்மையை இலகுவாக இழக்க நேரிடும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பொதுக் கூட்டமொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
” ஆளுங்கட்சி வசம் தற்போது 123 ஆசனங்களே உள்ளன. எனவே, இன்னும் 12 பேர் அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டால், அரசு பெரும்பான்மையை இழந்துவிடும். தற்போதைய சூழ்நிலையில் 12 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அரசுமீது அதிருப்தியில் உள்ளனர். எனவே, உரிய தருணம்வரும்போது எமது பலத்தை காட்டுவோம். – என்றும் கம்மன்பில குறிப்பிட்டார்.
You must be logged in to post a comment Login