அரசியல்

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் மீது தாக்குதல்! – வரலாற்றில் பதிவான மோசமான சம்பவம்

Published

on

“காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை பஸ்களில் பூட்டிவைத்து, பொலிஸார் மிகவும் கேவலமான முறையில் நடந்துகொண்டுள்ளனர். இதனை நாம் இந்த சபையில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இலங்கை வரலாற்றில் பதிவான மிகவும் கேவலமான சம்பவமாக இது பதிவாகும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

அவர்கள் வருகை தந்த பஸ்ஸை தடுத்து, அவர்களை பஸ்களுக்குள்ளேயே பூட்டி வைத்து மிகவும் கேவலமாக நடந்துகொண்டுள்ளனர். பஸ்ஸில் இருந்து இறங்கி முற்பட்டவர்கள் தாக்கியுள்ளனர். உதைத்துள்ளனர். பெண்களை எப்படி ஆண் மருத்துவர் சோதிக்க முடியும். எனவே, மிகவும் கேவலமாக பொலிஸார் நடந்துகொண்டுள்ளனர். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அதேவேளை, இன்று சிங்கள மக்கள் எதிர்நோக்கும் நிலையை அன்று நாம் எதிர்கொண்டோம். பிரபாகரன் காலத்தில் இப்படி நடக்கவில்லை, பட்டினியில் எவரும் சாகவில்லை என சிங்கள மக்கள் கூறும் அளவுக்கு நிலைமை வந்துள்ளது.” – என்றார் சிறிதரன் எம்.பி.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version