செய்திகள்

சர்ச்சைக்குரிய திருமதி அழகுராணி பட்டத்தை இழக்கும் புஸ்பிகா!!

Published

on

உலக திருமதி அழகியாக சென்ற  புஷ்பிகா டீ சில்வாவுக்கு இரண்டாவது தடவையும் இலங்கை திருமதி அழகுராணி பட்டத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

புஷ்பிகா டீ சில்வா பெற்றுள்ள இலங்கை திருமதி அழகுராணி பட்டத்தை உடனடியாக நீக்குவதற்கு இலங்கை திருமதி அழகிராணி அமைப்பினர் தீர்மானித்துள்ளனர்.

இலங்கை  திருமணமான அழகுராணி அமைப்பின் தேசிய அமைப்பாளர் சந்திமால் ஜெயசிங்கவினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நேற்று முதல் புஷ்பிகா த சில்வா இலங்கை திருமதி அழகுராணி என்ற பட்டத்தை உள்ளூரிலும் வௌிநாடுகளிலும் பயன்படுத்த முடியாது.

கடந்த ஆண்டு இலங்கை திருமணமான அழகுராணி போட்டியில் பங்குபற்றிய புஷ்பிகா த சில்வா பெரும் குழப்பக்காரமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் இலங்கை திருமதி அழகுராணி பட்டத்தை வென்றார்.

அதனைதொடர்ந்து அமெரிக்காவில் நடந்த உலக திருமதி அழகுராணி போட்டியில் கலந்துகொண்டு தோல்வியடைந்தார்.

அதன்பின்னர் தன்னுடைய தோல்விக்கு ரோசி சேனாநாயகம் மற்றும் சந்த்மால் ஜெயசிங்க போன்றவர்களே காரணமென குற்றம் சாட்டினார்.

தனக்கு கிடைக்கவிருந்த உலக திருமதி அழகுராணி பட்டம் இவர்களின் அச்சுறுத்தல் காரணமாகவே கிடைக்காமல் சென்றதாக தெரிவித்தார்.

இதனால் இவருக்கு எதிராக ரோசி சேனாநாயகம் மற்றும் சந்த்மால் ஜெயசிங்க போன்றவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
#SriLankaNews

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version