இலங்கை

கொரோனா அறிகுறிகளுடன் பாராளுமன்றம் வந்த ஊழியர் – பிறகு நடந்தது!!

Published

on

காய்ச்சல், தடிமல் உள்ளிட்ட கொவிட் 19 அறிகுறிகளுடன் பாராளுமன்றத்திற்கு வந்த கொவிட் தொற்றுக்குள்ளான ஊழியர் ஒருவருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் கொவிட் 19 அறிகுறிகள் தொடர்பில் அறிந்தும் பாராளுமன்றத்தில் பல்வேறு பிரிவுகளுக்குச் சென்று பொறுப்பற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

புலனாய்வுப் பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் சமீபத்தில் முகம் சிவந்து பல்வேறு அறிகுறிகளுடன் இருந்துள்ளார்.

இதை அவதானித்த மற்ற ஊழியர் ஒருவர் உங்களுக்கு உடம்பு சரியில்லையென்றால் உடனடியாக சென்று கொவிட் 19 பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

எனினும் அவர் அதை அலட்சியப்படுத்தியதுடன் ஏனைய ஊழியர்களை அவ்வப்போது வலுக்கட்டாயமாக கட்டித் தழுவியதாகத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து  பாராளுமன்றத்தின் தலைமை அதிகாரிகளுக்கு இதுதொடர்பில் அறிவிக்கப்பட்டதையடுத்து அவர் பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டார்.

அவ்வறிக்கையில் அவருக்கு கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

அவரைக் கட்டிப்பிடித்த ஊழியர் உட்பட, திணைக்களத்தில் இருந்த  ஐந்து ஊழியர்களுக்கும் கொவிட் தொற்று இருந்தமையும் பரிசோதனைகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

அந்த ஊழியரின் பொறுப்பற்ற நடத்தையால் அப்பிரிவு ஊழியர்களிடையே கொவிட் பரவியிருக்கலாம் என பாராளுமன்ற அதிகாரிகள் கருதுகின்றனர்.

பாராளுமன்றத்தில் கொவிட் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு கடுமையாக உழைத்து வரும் இவ்வேளையில் சில ஊழியர்கள் பொறுப்பற்ற முறையில் செயற்படுவது பிரச்சினைக்குரிய விடயம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அவரது குடும்பத்தினரும் காய்ச்சலுடன் வீட்டில் இருந்த வேளையில் இந்த ஊழியர் பாராளுமன்றத்திற்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.

கொவிட் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாராளுமன்றத்திலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

எனினும் அவர் வீட்டுக்குச் சென்ற பிறகும் காய்கறி வாங்க பொதுச் சந்தைக்குச் சென்றதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சுகாதார அதிகாரிகளால் தனிமைப்படுத்தலுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

#SriLankaNews

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version