இலங்கை

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு!! – மின்உற்பத்தியில் மேலும் சிக்கல்

Published

on

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு  மின்உற்பத்தியில் மேலும் சிக்கல் நீர்மின் உற்பத்தி நிலையங்களாக செயற்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வறட்சியான காலநிலையினை தொடர்ந்த குறைவடைந்துள்ளதாக நீர்த்தேக்க பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம்  இன்று காலை 6 மணிவரை மேலும் குறைந்துள்ளதாக நீர்த்தேக்க பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.

மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்க அணையின் உயரம் 120 அடியாகும். எனினும் தற்சமயம்  நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 80.9 அடியாக குறைந்துள்ளது.

காசல்ரீ நீர்த்தேக்க அணையின் உயரம் 155 அடியாகும், எனினும் தற்சமயம் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 134 அடியாக குறைந்துள்ளது.

லக்சபான நீர்த்தேக்கத்தின் உயரம் 82 அடியாகும், அதன் நீர்மட்டம் 75.2 அடியாக குறைந்துள்ளது.

விமலசுரேந்திர நீர்த்தேக்க அணையின் உயரம் 91 அடியாகவும், நீர் கொள்ளளவு 86.8 அடியாகவும் குறைந்துள்ளது.

கனியன் நீர்த்தேக்கத்திலுள்ள அணையின் உயரம் 55 அடியாக உள்ள நிலையில், தற்போது அணையின் நீர்மட்டம் 49.1 அடியாக குறைந்துள்ளது.

கனியன் நீர்மின் நிலையத்திற்கு நீரை கொண்டு செல்லும் சுரங்கப்பாதையின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் உற்பத்தி இன்னும் சில மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version