இலங்கை

ஆரியகுளத்தின் புனிதத்தன்மையை உறுதி செய்க!

Published

on

வடக்கு – கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்களின் உச்சநீதிமன்ற வழக்கு ஆவணங்கள் நீண்டகாலமாக மொழிப் பிரச்சினை காரணமாக நிலுவையிலுள்ளது.

அவற்றை கால தாமதமின்றி விரைவுபடுத்தி தீர்ப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு இலங்கையின் பிரதம நீதியரசரிடம் வலியுறுத்துவதற்கு மகஜர் சமர்பிக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரும் சிரேஸ்ர மனித உரிமை சட்டத்தரணியுமான முடியப்பக றெமீடியஸ் முன்வைத்த யோசனைக்கு சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

யாழ்’ மாநகர சபையின் மாதாந்த அமர்வும் புதிய அண்டின் முதலாவது அமர்வும் இன்று நடைபெற்றது. இதன்போதே குறித்த முன்மொழிவுக்கு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்டபில் மேலும் கருத்துரைத்த உறுப்பினர் றெமீடியஸ்

வடமாகாணத்திற்கான விஜயமொற்றை முன்னெடுத்து எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ் மாவட்டத்திற்கு பிரதம நீதியரசர் வருகை தரவுள்ளார்.

இந்தநிலையில், வடக்கு – கிழக்கை சேர்ந்த மேன்முறையீட்டுக்காக சமர்ப்பித்தும், இதுவரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது தேங்கியுள்ள வழக்குகளை விரைவுபடுத்துமாறும்,

காலதாமததைத் தவிர்த்து நீதிக்காக காத்திருக்கும் தரப்பினருக்கு விரைவான தீர்ப்பை வழங்க வேண்டும் என்றும் எமது சபையின் ஊடாக ஒரு முன்மொழிவை நிறைவேற்ற வேண்டும்.

அதனை குறித்த ஆவணங்களுடன் அவரிடம் சமர்ப்பித்து வலியுறுத்துவது தொடர்பில் றெமீடியஸ் பிரஸ்தாபித்து அதனை ஒரு முன்மொழிவாக சமர்ப்பிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் குறித்த யோசனையை சபை ஒருமனதாக ஏற்றுக்கொண்டு நிறைவேற்றியதுடன் குறித்த ஆவணங்களை பிரதம நீதியரசரிடம் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக தெரிவித்திருந்தது.

இதேவேளை, ஆளுநரின் அதிகாரங்கள் தொடர்பில் கடிதம் ஒன்று தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அந்தக் கடிதத்தில் தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம் தொடர்பில் வரையறை செய்துள்ளது.

அத்துடன் அவ்வாறு ஒழுக்கம் மற்றும் சட்டவரையறையை மீறி செயற்படும் உறுப்பினர்களுக்கு, எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவோ அல்லது அவரை நீக்கவோ அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக முதல்வர் மணிவண்ணனால் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே வாகன பகுதியில் ஒரே ஒரு அதிகாரியே இருப்பதால் வாகனங்களில் ஏற்படும் சாதாரண பழுதுகளை கூட உடனடியாக செய்யமுடியாதிருப்பதால், அவரது அதிகாரத்தை மேலும் பலருக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டது.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடர்பிலும் சபையில் விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக இறுதியாக நடைபெற்ற குறித்த கண்காட்சிக்காக மாநகரசபைக்க செலுத்த வேண்டிய நிதியான 30 இலட்சம் இதுவரை செலுத்தப்படாதிருந்ததாகவும், அதில் 10 இலட்சம் தற்போது குறித்த தரப்பினரால் செலுத்தப்பட்டுள்ளதாகவும். மிகுதிப் பணம் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் முதல்வர் தெரிவித்திருந்தார்.

இதேநேரம் இம்முறை இறுக்கமாக வர்த்தக கண்காட்சியில் ஸ்ரோல் ஒன்றின் அறவீடு குறைப்பு. மாநகரசபை இறுக்கமாக இருக்க வேண்டும்.

நுழைவுச் சீட்டு உள்ளிட்ட விடயங்களில் மோசடி இடம்பெறாத வகையில் கண்காணிப்பு இறுக்கமாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

அவ்வாறு மோசடிகள் காணப்பட்டால் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் 3 இலட்சம் ரூபா தண்டம் அறவிடப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் ஆரியகுளம் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும்.

அப்பகுதியை புனரமைக்கும் போது, இருந்துவந்த நிலை தற்போது மாறி, பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தும் சம்பவங்கள் நடந்தேறி வருவதால், அப்பகுதியில் சிசிரிவி பொருத்தல் அவசியம்.

அதன் பாதுகாப்பையும் புனிதத்தன்மையையும் உறுதிசெய்ய சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஈபிடிபியின் மாநகர சபை இரா.செல்வவடிவேல் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version