இலங்கை

உண்மை அம்பலமாவதைத் தடுக்க முடியாது: பேராயர்

Published

on

ஜனாதிபதித் தேர்தலை மனதில் வைத்து உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றனர் என கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஏப்ரல்-21 தாக்குதலுக்குப் பின் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு எவ்வாறு திட்டமிடப்பட்ட தாக்குதலை தடுக்க முயன்றவர்கள் எவ்வாறு தடுக்கப்பட்டனர் என்பது உட்பட பல விடயங்கள் விரைவில் வெளிவரும்.

ஆண்டவன் உண்மையை வெளிப்படுத்துவதை எவராலும் தடுக்க இயலாது. ஜனாதிபதித் தேர்தலை மனதில் வைத்தே இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அத்துடன் இந்தியாவின் உளவு அமைப்பான ரோ அமைப்பு வழங்கிய தகவல்கள் சிலவற்றை, உள்நோக்கம் கொண்ட சக்திகள் வேண்டுமென்றே அலட்சியம் செய்துள்ளன என்பதும் புலனாகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறுவதை தடுப்பதற்கு சில அதிகாரிகள் முயன்றார்கள் ஆனால் அவர்கள் தடுக்கப்பட்டார்கள் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த 74 வருடங்களாக நாட்டை ஆண்டவர்கள் அதனை ஆழமான புதைகுழிக்குள் தள்ளிவிட்டனர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version